கல்யாண கலாட்டா!

தினமலர்  தினமலர்
கல்யாண கலாட்டா!

'ஜி.வி.பிரகாஷ் குமாரின் படங்கள் என்றால், எக்குத் தப்பான காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கும்' என, எழுதப்படாத விதிமுறைகள் உருவாகி விட்டன. இந்த இமேஜை அடித்து உடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், செம என்ற தலைப்பில் ஒரு படம் தயாராகியுள்ளது. கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாக்கள் தான், படத்தின் திரைக்கதையாம். ஏற்கனவே, சுந்தர்.சி படங்களில் இதுபோன்ற காட்சிகள் வந்தாலும், இது, முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் தயாராகியுள்ளதாம். தொண்டன் படத்தில் நடித்த அர்த்தனா, இதில், ஜி.வி.,க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மூலக்கதை