தூக்கு தண்டனை குற்றவாளிகளின் மனுவை 3 பேர் அமர்வு விசாரிக்கும்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் பாபு என்கிற கேதன் மற்றும் சன்னி என்கிற தேவேந்திரா. இவர்கள் இருவருடன் மற்றொருவரும்  சேர்ந்து கடந்த 2012ம் ஆண்டு வீட்டிற்கு ெவளியே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து  கொன்று, கழிவுநீர் கால்வாயில் சடலத்தை வீசிவிட்டனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2014ல் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம்  அதை உறுதி செய்தது. 2015ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி உச்சநீதிமன்றம் இந்த தண்டனையை உறுதி செய்தது. இந்நிலையில் பாபு மற்றும் தேவேந்திரா ஆகியோர் தங்களது தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி உச்ச  நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் சந்திராசூட் மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய கோடைக்கால அமர்வு முன்  நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் “கோடை விடுமுறைக்கு பின்னர் மனு குறித்து விசாரிக்கப்படும்” என்றனர்.  ஆனால் எதிர்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித் மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகளை  கேட்டுக்கொண்டார். மனு தாக்கல் செய்தவர்களின் கருணை மனுக்களை கடந்த மாதம் 25ம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துவிட்டார்.  எனவே எந்த நேரத்தில் ேவண்டுமானாலும் தண்டனையை நிறைேவற்றுவதற்கு வாய்ப்பிருப்பதால் மனுவை அவசரமாக விசாரிக்கும்படி நீதிபதிகளை  அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு நீதிபதிகள், “சட்டரீதியான அனைத்து வழிகளும் முடிந்த பின்னர் இறுதியாக தூக்கு தண்டனை கைதிகள் தங்களது தண்டனையை எதிர்த்து  தாக்கல் செய்யும் மறுஆய்வு மனுக்கள், தண்டனையை எதிர்த்து புதிதாக ரிட் மனு தாக்கல் செய்யலாமா என்பது குறித்து கடந்த காலங்களில் 3 பேர்  கொண்ட அமர்வுதான் விசாரித்துள்ளது” என்றனர்.

மூலக்கதை