எம்எல்ஏக்களுக்கு எதிராக அவதூறு செய்தி 2 பத்திரிகையாளர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை: கர்நாடக பேரவையில் ஒருமனதாக தீர்மானம்

தினகரன்  தினகரன்

பெங்களூரு: கர்நாடக எம்எல்ஏக்களுக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்ட கன்னட  இதழ் ஆசிரியர்கள் இருவருக்கு ஓராண்டு  சிறை தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு கர்நாடக  சட்டப்பேரவையின் சபாநாயகராக காகோடு திம்மப்பா பதவி வகித்து வந்தார்.  தற்போது சபாநாயகராக  உள்ள கோலிவாட் அப்போது எம்.எல்.ஏ.வாக இருந்தார்.  பெங்களூருவில்  இருந்து வெளியாகும், ‘ஹாய் பெங்களூரு’ மற்றும் ‘யலகங்கா  வாய்ஸ்’  ஆகிய கன்னட வார இதழ்களில் கோலிவாட் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள்  குறித்து அவதூறாக செய்தி வெளியானதாக கூறப்படுகிறது. இது குறித்து  கோலிவாட் சட்டப்பேரவையில் உரிமை மீறல் பிரச்னை  கொண்டு வந்தார்.இதன்  பின்னர், சபாநாயகராக இருந்த காகோடு திம்மப்பா அமைச்சராகவும், எம்.எல்.ஏ.வாக  இருந்த ேகாலிவாட் சபாநாயகராகவும் பொறுப்பேற்றனர். இந்நிலையில் ‘ஹாய் பெங்களூரு’ கன்னட வார இதழின்  ஆசிரியர் ரவி பெளிகெரே மற்றும் ‘யலகங்கா வாய்ஸ்’ கன்னட வார இதழின் ஆசிரியர்   அனில் ராஜு ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும்,  ரூ.10 ஆயிரம்  அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால்  இருவரும் கூடுதலாக   ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும் சபாநாயகர் கோலிவாட்  பிறப்பித்த உத்தரவில்  குறிப்பிடப்பட்டுள்ளது.  இதுகுறித்து சபாநாயகர் ேகாலிவாட்  கூறுகையில், ‘‘அடுத்தக்கட்ட நடவடிக்கை சட்டப்படி மேற்கொள்ளப்படும.   அவதூறாக  செய்தி வெளியிட்டதற்கு பேரவையில் ஒரு மனதாக முடிவெடுத்து தண்டனை  வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மூலக்கதை