இறந்த குழந்தை உயிர்பிழைத்த விவகாரம் ஏ.கே.ராய் பேட்டி

தினகரன்  தினகரன்

கடந்த சில தினங்களுக்கு முன்பாக, சப்தர்ஜங் மருத்துமனையில் பெண் ஒருவர் பிரசவித்த குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த குழந்தையை எரியூட்டுவதற்காக இடுகாட்டுக்கு குழந்தையின் தந்தை தூக்கிச் சென்று அதற்கான நடைமுறைகளை செய்தார். அப்போது அந்தக்குழுந்தை திடீரென கை,கால்களை அசைத்தது. பின்னர் அக்குழந்தை மீண்டும் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர். ஆனால், 30 மணி நேரம் உயிரோடிந்த அக்குழந்தை பின்னர் இறந்துவிட்டது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான அறிக்கை நேற்று சமர்பிக்கப்பட்டது. அதில், மருத்துவமனையின் அலட்சியம் ஏதுமில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சப்தர்ஜங் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஏ.கே.ராய் கூறுகையில்,‘‘22 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தை, அசைவில்லாமல் இருந்து மூன்று மணி நேரத்திற்கு பிறகு உயிர் திரும்ப சாத்தியம் இருக்கிறது. ஏனென்றால், குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவ்வப்போது, சுவாசிப்பதிலும், இதயத் துடிப்பிலும் இடைநிறுத்தம் ஆகும். அதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், அதுபோன்ற குழந்தைகள் ஆபத்தான நிலைக்கு தான் செல்லும். இந்திய கர்ப்ப விதியின் கீழ், 20 வார கரு சட்டப்படி உயிரிழப்பு செல்லாது. அதனால், இதில் மருத்துவமனையின் அலட்சியம் எதுவும் இல்லை’’ என்றார்.

மூலக்கதை