72 வருடங்களின் பின்னர் பதிவான அதிகூடிய வெப்பம்! - நேற்று புதன்கிழமை பதிவு!!

PARIS TAMIL  PARIS TAMIL
72 வருடங்களின் பின்னர் பதிவான அதிகூடிய வெப்பம்!  நேற்று புதன்கிழமை பதிவு!!

ஜூன் மாதத்தில் அதிகூடிய வெப்பம் நேற்று புதன்கிழமை பதிவாகியுள்ளது. இது 1945 ஆம் ஆண்டுக்கு பின்னர் பதிவாகிய ஜூன் மாதத்தில் நிலவிய அதிகூடிய வெப்பமாகும். 
 
கடந்த திங்கட்கிழமை தொடக்கம் பிரான்ஸ் முழுவதும் அதிகூடிய வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை, நேற்று புதன்கிழமை, இன்று வியாழக்கிழமை ஆகிய நாட்களில் அதிகூடிய வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், பிரெஞ்சு வானிலை ஆய்வு மையமான Météo France வெளியிட்டுள்ள தகவலின் படி, நேற்று புதன்கிழமை சராசரியாக நாடு முழுவதும் 26.4 செல்சியஸ் வெப்பம் நிலவியது எனவும், இது கடந்த 1945 ஆம் ஆண்டின் பின்னர், ஜூன் மாதத்தில் பதிவான அதிகூடிய வெப்பம் எனவும் தெரிவித்துள்ளது. 
 
இதற்கு முன்னதான 2005 ஆம் ஆண்டின் ஜூன் 28 ஆம் திகதி 26.1 செல்சியஸ் வெப்பம் நிலவியது எனவும், அதன் பின்னர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஜூன் மாதத்தின் அதிகூடிய வெப்பமாக 26.2 செல்சியஸ் பதிவாகியது. அதைத் தொடர்ந்தே, நேற்று புதன்கிழமை இந்த புதிய எண்ணிக்கை பதிவாகியது.

மூலக்கதை