71 மாவட்டங்களில் கடும் வெப்ப எச்சரிக்கை - வீணாகிப் போன 150 மில்லியன் லிட்டர் நீர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
71 மாவட்டங்களில் கடும் வெப்ப எச்சரிக்கை  வீணாகிப் போன 150 மில்லியன் லிட்டர் நீர்!!

பிரான்சின் வானிலை மையம் தொடர்ச்சியாக 71 மாவட்டங்களிற்கு வெப்ப அலை எச்சரிக்கையை வழங்கியுள்ளது. சனிக்கிழமை காலை வரை கடுமையான வெபபநிலை நிலவும் எனப் பிரான்சின் வானிலை ஆராயச்சி நிறுவனமான Institut de métérologie  எதிர்வு கூறியுள்ளது.
 
நேற்றுப் புதன்கிழமை பதிவு செய்யப்பட்ட அதியுச்ச வெப்ப நிலையானது, இதுவரை அதிகூடிய வெப்பநிலையாகக் கருதப்பட்ட, 1945 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வெப்ப நிலையினை விட அதிகமாக இருந்துள்ளது.
 
இந்த வெப்ப நிலையானது, பரிசிலும் அதனை அண்டிய 30 மாவட்டங்களிலும் வளிமண்டலத்தில் ஓசோன் மாசடைவை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
இந்த அதியுச் வெப்ப நிலை காரணமாக, தீயணைப்புப் படையினரிற்காக வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் நீர்க் குழாய்களைத் ( bouches d'incendie) திறந்து விட்டு, சிறுவர்களும் இளைஞர்களும் அதில் குளித்து வியைளாடி உள்ளனர். இது இல்-து-பிரான்சின் பல பகுதிகளில் நடந்துள்ளது. இதனால் 1500 இலட்சம் லிட்டர் (150 000 m3 - 1500.000.000 லிட்டர்) நீர், நேற்று மட்டும் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தண்ணீர்த் தட்டுப்பாட்டினை நோக்கி எதிர்காலத்தைத் தள்ளிவிடும் அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் இல்-து-பிரான்சின் நீரச் சங்கங்கள் அச்சம் கொண்டுள்ளன.
 

மூலக்கதை