சிறிலங்காவுடன் கைகோர்க்கும் பிரான்ஸ்! முதல்முறையாக சென்ற மிஸ்ரா கப்பல்

PARIS TAMIL  PARIS TAMIL
சிறிலங்காவுடன் கைகோர்க்கும் பிரான்ஸ்! முதல்முறையாக சென்ற மிஸ்ரா கப்பல்

 

சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட பிரான்ஸ் இணக்கம் வெளியிட்டுள்ளது.
 
சிறிலங்கா சென்றுள்ள பிரான்ஸ் கடற்படையின் மிஸ்ரால் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் ஸ்ரனிஸ்லஸ் டி சார்கெரஸ் தெரிவித்துள்ளார்.
 
பிரான்ஸ் கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பலான மிஸ்ராலில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, அதன் கட்டளை அதிகாரியான கப்டன் ஸ்ரனிஸ்லஸ் டி சார்கெரஸ் இந்த தகவலை வெளியிட்டார்.
 
இந்தக் கூட்டுப் பயிற்சிகளின் போது கடற்கொள்ளை எதிர்ப்பு, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு, என்பவற்றில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் பிரான்ஸ் கடற்படையின் சிறப்புப் படைகள் ஈடுபடும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
பிரான்ஸ் கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பல் ஒன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

மூலக்கதை