குடியரசுத் தலைவர் தேர்தல் : எதிர்கட்சிகள் சார்பில் மீராகுமார் வேட்பாளராக அறிவிப்பு

தினகரன்  தினகரன்

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மீராகுமார் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் நடத்திய ஆலோசனை கூட்த்திற்கு பின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீராகுமார் மக்களவையின் முன்னாள் சபாநாயகர் ஆவார். மக்களவையின் தலைவராக பொறுப்பு வகித்த முதல் பெண் மீராகுமார் ஆவார். மேலும் இவர் முன்னாள் துணைப் பிரதமர் ஜெகஜீவன் ராமின் மகளும் ஆவார். சட்டம் பயின்றுள்ள மீராகுமார், இந்திய தூதரக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.  குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ தலைமையிலான தே.ஜ கூட்டணி வேட்பாளராக, பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். இவருக்கு ஆதரவு தெரிவிக்கும்படி எதிர்க்கட்சிகளிடம் பாஜ வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அவர் RSS சித்தாந்தத்தை உடையவர், அவரை பொது வேட்பாளராக ஏற்க முடியாது என காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தெரிவித்து விட்டன. ஆனால் சபாஜ.வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பிஜூ  ஜனதா தளம், அதிமுகவின் எடப்பாடி மற்றும் OPS அணியினர் , தெலங்கானா ராஷ்டிரிய சமீதி, ஓய்எஸ்ஆர்  காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூறியுள்ளன. இந்நிலையில் எதிர்க்கட்சி கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளமும், ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. பீகாரில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளம், தங்கள் மாநில ஆளுநராக இருந்தவர், ஜனாதிபதியாக வருவதை பெருமையாக நினைக்கிறது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராம்நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தலில் சேலம் பத்மராஜன், தர்மபுரியைச் சேர்ந்த அக்னி ராமச்ந்திரன் உட்பட இதுவரை 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 8 பேர் மனுக்கள் போதிய ஆதாரங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சி ஆதரவு பெற்ற யாரும் இதுவரை மனுத்தாக்கல் செய்யவில்லை.* ஜனாதிபதி தேர்தலில் ஒரு எம்.பி.யின் ஒட்டு மதிப்பு 708.* எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும்.* ஜனாதிபதி தேர்தலில் ஒட்டு மொத்த ஓட்டு மதிப்பின் எண்ணிக்கை 10,98,903. இதில் 50 சதவீதம் அதாவது 5,49,452 ஓட்டுக்கள் பெற்றால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.* பா.ஜ தலைமையிலான தே.ஜ கூட்டணியில் மொத்த ஓட்டு மதிப்பு 5,37,683 ஓட்டுக்கள்.* பாஜ.வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பிஜூ ஜனதா தளம், அதிமுகவின் இரு பிரிவுகள், தெலங்கானா ராஷ்டிரிய சமீதி, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. * தற்போது ஐக்கிய ஜனதா தளமும் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவரின் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது

மூலக்கதை