காலாவை அடுத்து அமெரிக்கா பறக்கும் ரஜினி; ஏன்..?

FILMI STREET  FILMI STREET
காலாவை அடுத்து அமெரிக்கா பறக்கும் ரஜினி; ஏன்..?

ரஞ்சித் இயக்கும் காலா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

தற்போது தன்னை தேடி வரும் சில பிரபலங்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் வரும் ஜூன் 24-ம் தேதி மீண்டும் ‘காலா’ பட சூட்டிங்கில் கலந்துக் கொள்கிறார்.

இதனையடுத்து அங்கிருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருக்கிறாராம்.

மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ளத்தான் அங்கு செல்கிறாராம்.

அதன் பின்னர் ஜூலை 13ம் தேதி ரஜினி சென்னை திரும்புகிறார் என கூறப்படுகிறது.

மூலக்கதை