‘இ’ த்ரில்லர் பாம்பு படத்தில் நடிக்கும் கெளதமி - ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
‘இ’ த்ரில்லர் பாம்பு படத்தில் நடிக்கும் கெளதமி  ...

இப்போது தமிழ் சினிமாவை மட்டுமல்ல, மலையாள சினிமாவையும் பேய் படங்கள், பாம்பு படங்கள், த்ரில்லர் படங்கள் சீசன் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது.



குக்கு சுரேந்திரன் என்பவர் மலையாள படத்தை இயக்கி, அதற்கு ‘இ’ என்கிற ஒற்றை எழுத்தை படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். இப்படத்தில் கௌதமி நடித்துள்ளார்.   கௌதமி பதினான்கு வருடங்கள் கழித்து மீண்டும் மலையாள திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இந்தப்படத்தில் கௌதமி, அல்சீமர் என்கிற ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார். சமீபத்தில் இந்தப்படத்தின் டீசர்  வெளியானது.   த்ரில்லர் பாம்பு படமாக உருவாகியுள்ளது.  இப்படத்தில் த்ரில்லுக்கு பஞ்சமே இல்லை.

‘இ’ படம் ஆகஸ்ட் -11ம் தேதி வெளியாகிறது.
 

.

மூலக்கதை