மோகன்லாலை ஸ்படிகம் இயக்குனர் சந்தித்ததன் பின்னணி..!

தினமலர்  தினமலர்
மோகன்லாலை ஸ்படிகம் இயக்குனர் சந்தித்ததன் பின்னணி..!

மலையாள மக்களுக்கு பிடித்த எவர்கிரீன் படங்களில் பத்து படங்களை மட்டும் பட்டியலிட்டால் அதில் 2௦ வருடங்களுக்கு முன் வெளியான மோகன்லாலின் 'ஸ்படிகம்' கட்டாயம் இடம்பெறும். அந்தப்படத்தை இயக்கிய பெருமைக்குரிய இயக்குனர் தான் பத்ரன். அதுமட்டுமல்ல மம்முட்டியை வைத்து 'அய்யர் தி கிரேட்' உட்பட திரையுலக வரலாற்றில் நிலைத்து நிற்கும்படியான படங்களை இயக்கியும் இருக்கிறார் பத்ரன். ஸ்படிகம் தவிர, அங்கிள் பன், ஒலிம்பியன் ஆண்டனி ஆடம் ஆகிய படங்களை மோகன்லாலை வைத்து இயக்கிய இவர், கடைசியாக மோகன்லால் நடித்த 'உடையோன்' என்கிற படத்தை இயக்கினார்.
தற்போது 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார் பத்ரன். ஒரு கமர்ஷியல் ஆக்சன் படமாக உருவாகவுள்ள இந்தப்படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மானோ அல்லது பிருத்விராஜோ நடிக்கலாம் என சொல்லப்பட்டு வந்த நிலையில், இப்போது மோகன்லாலை வைத்தே இவர் இயக்க உள்ளார் என்கிற தகவல் உறுதியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இயக்குனர் பிரியதர்சன் விசிட் அடித்தபோது அவருடன் இயக்குனர் பத்ரனும் உடன் சென்று மோகன்லாலுடன் உரையாடியது இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள்.

மூலக்கதை