காணாமல் போன டிஜிட்டல் பரிவர்த்தனை: ஏடிஎம்களில் பணம் எடுப்பது மீண்டும் அதிகரிப்பு

தினகரன்  தினகரன்

டெல்லி: பழைய ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையின் போது ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பது 60 சதவீதம் அளவிற்கு குறைந்து இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து விட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மத்திய அரசு கொண்டு வந்தது. மேலும் ஏடிஎம்கள் மூலம் பணம் எடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்தது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு கடந்த ஆண்டு ஏடிஎம் மூலம் ஒரு நாளைக்கு 2,700 கோடி ரூபாய் தான் எடுக்கப்பட்டது. முன்னதாக ஒரு நாளைக்கு 7,000 கோடி ரூபாய் ஏடிஎம்கள் மூலம்  எடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கை அமலில் இருந்த போது டிஜிட்டல் பரிவர்த்தனை இரட்டிப்பாக அதிகரித்தது. ஆனால், தற்போது அனைத்தும் முற்றிலும் மாறி விட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏடிஎம்கள் மூலம் 2,16,860 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் பழைய நிலை திரும்பி விட்டது. இருப்பினும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை