பெங்களூருவில் முதல் ஹோம் டெலிவரி டீசல் விற்பனை தொடக்கம்

தினகரன்  தினகரன்

பெங்களூரு: இந்தியாவின் முதல் ஹோம் டெலிவரி டீசல் விற்பனை  தற்போது பெங்களூருவில் தொடங்கியது. மை பெட்ரோல் பம்ப் என்ற தனியார் நிறுவனம் டீசல் விற்பனையை தொடங்கியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறுகையில் பெட்ரோல் என்பது இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் டீசல் என்பது  கனரக வாகனங்கள் ,தொழில் நிறுவனங்கள் தொடங்கி விவசாயம் வரை தேவைப்படும் ஒன்று என தெரிவித்துள்ளது. மேலும் வருடத்துக்கு பெட்ரோலின் தேவை 22 மில்லியன் மெட்ரிக் டன் மட்டும் டான் தான் பயன்படுகிறது ஆனால் டீசலின் தேவை மட்டும் சுமார் 77 மில்லியன் மெட்ரிக் டன் பயன்படுகிறது என்றும் அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளதது. டீசலுக்கான முன்பதிவைத் தொலைபேசி மூலமாகவோ செயலி மூலமாகவோ செய்யலாம். 100 லிட்டர் வரைக்கும் ரூ.99 டெலிவரி சார்ஜாக வசூலிக்கப்படும் என்றும் 100 லிட்டருக்கு மேல் லிட்டருக்கு ஒரு ரூபாய் வைத்து வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை