தனக்கு தேவையானதை தானே வாங்கும் புத்திசாலி நாய்: ஆச்சரியத்தில் பிரேசில் மக்கள்!

தினகரன்  தினகரன்

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் தனக்‍கு தேவையான பொருட்களை தானே கடைக்‍கு சென்று வாங்கி வரும் அழகிய நாயின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள பராய் என்ற பகுதியில் உள்ள ஒருவரது செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டு வருகிறது பிடுகோ என்ற நாய். இதற்கு 12 வயது ஆகிறது. தனது எஜமானருக்‍கு இடையூறு ஏற்படுத்தக்‍கூடாது என்று எண்ணும் இந்த பிடுகோ, தனது வீட்டில் இருந்து 600 மீட்டர் தொலைவில் உள்ள செல்லப் பிராணிகளின் உணவு விற்பனை கடைக்‍கு சென்று தனக்கு தேவையான பொருட்களை தானே வாங்கி வருகிறது. ஒருமுறை கூட பணம் கொடுக்‍காமல் பிடுகோ பொருட்களை வாங்கியதில்லை என  கடைக்‍காரர்கள் வியப்புடன் கூறியுள்ளனர்.

மூலக்கதை