2024ல் மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா: ஐ.நா., கணிப்பு

தினமலர்  தினமலர்
2024ல் மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா: ஐ.நா., கணிப்பு

ஐக்கிய நாடுகள்: இந்திய மக்கள் தொகை 2024ம் ஆண்டில் சீன மக்கள் தொகையை தாண்டும் என ஐ.நா., ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது சீன மக்கள் தொகை 141 கோடியாகவும், இந்திய மக்கள் தொகை 134 கோடியாகவும் உள்ளது. இது உலக மக்கள் தொகையில் முறையே 19 மற்றும் 18 சதவீதமாகும். அடுத்த 7 வருடத்தில், இந்திய மக்கள் தொகை, சீன மக்கள் தொகையை முந்தும். இதற்கு முன்னர், இந்திய மக்கள் தொகை, 2022ல் சீனாவை தாண்டும் என கணக்கிடப்பட்டது.
2024ல் இரு நாடுகளின் மக்கள் தொகை தலா 144 கோடியாக இருக்கும். இதன் பின்னர் தொடர்ந்து, இந்திய மக்கள் தொகை அதிகரித்து செல்லும். 2030ல் இந்திய மக்கள் தொகை 150 கோடியாகவும், 2050ல் 166 கோடியாகவும் இருக்கும். அதேநேரத்தில், சீன மக்கள் தொகை 1030 வரை நிலையாகவும் இருக்கும். இதன் பின்னர் குறைய துவங்கும்.
2050க்கு பிறகு இந்திய மக்கள் தொகை குறைய துவங்கும். 2100ல் 151 கோடியாக இருக்கும். அதேநேரத்தில் உலகளவில் மக்கள் தொகையில், இந்தியா முதலிடத்தில் இருக்கும். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை