கத்தாரில் தவிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்கள்: அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஏற்பாடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கத்தாரில் தவிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்கள்: அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஏற்பாடு

புதுடெல்லி: கத்தார் நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழலால் அங்கு தவித்துவரும் இந்தியர்களை மீட்க அடுத்த வாரம் முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. மத்திய கிழக்கு நாடான கத்தார், தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், சவுதி அரேபியா, பக்ரைன் உள்ளிட்ட 7 நாடுகள் கத்தாருடனான உறவை துண்டித்தன. பொருளாதார தடை விதித்ததால் உணவு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கத்தாரில் சுமார் 7 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். தற்போது அங்கு நிலவிவரும் அசாதாரண சூழலால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெரும்பான்மையானோர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அங்கு தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியர்களை அழைத்துவர சிறப்பு விமானங்களை இயக்குமாறு, விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, கத்தாருக்கு சிறப்பு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவுக்கு வருகிற 25ம் தேதி முதல் ஜூலை 8ம் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல், மும்பையிலிருந்து தோஹாவுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

186, 168 இருக்கைகளை கொண்ட சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்துவரப்படுவார்கள்.

.

மூலக்கதை