ஜனாதிபதி தேர்தலில் இதுவரை 24 பேர் வேட்பு மனு தாக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜனாதிபதி தேர்தலில் இதுவரை 24 பேர் வேட்பு மனு தாக்கல்

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் இதுவரை 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 8 பேரின் மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17ம் ேததி நடைபெற இருக்கிறது.

பாஜ கூட்டணி சார்பில் பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. இதுவரை 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதில் 8பேரின் வேட்பு மனுக்கள் சரியான ஆவணங்கள் இல்லை என உடனடியாக நிராகரிக்கப்பட்டு விட்டது. குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர் பெயர் அவரவர் சொந்த எம்பி தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள அதாவது எம்பி அல்லது எம்எல்ஏக்கள் 50 பேரின் ஆதரவு கையொப்பம் வேண்டும். பெரும்பாலும் தனிநபருக்கு இவ்வளவு எம்பிக்கள் ஆதரவு கிடைப்பது கடினம்.

இதனால் அநேகமாக அரசியல் கட்சிகள் ஆதரவு இல்லாத தனிநபர் வேட்பு மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவது உறுதி.

இதற்கிடையில ்எதிர்கட்சிகள் சார்பாக வேட்பாளரை நிறுத்துவது குறித்து இன்று காங்கிரஸ் தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜ வேட்பாளரை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு செய்தாலும், இடதுசாரிகள் அதனை ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்விக்குறி உள்ளது.


இதனால் ஜூலை 17ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடைபெறும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 20ம் தேதி எண்ணப்படுகின்றன.

அன்றைய தினம் அடுத்த ஜனாதிபதியின் பெயர் அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும்.

.

மூலக்கதை