காசநோயாளிக்கு ஆதார் அவசியம்: மத்திய அரசு அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காசநோயாளிக்கு ஆதார் அவசியம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய அரசின் காசநோய் திட்டத்தில் பயன் பெற ஆதார் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் காச நோயாளிகளுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து  வருகிறது.

இதில் பயன் பெறும் பயனாளிகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் கட்டாயம் ஆதார் பதிவு செய்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அசாம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் தவிர இதர அனைத்து மாநிலங்களிலும் ஆதார் அவசியம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அரசு கூறியுள்ளது.

2015ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் 28 லட்சம் காச நோயாளிகள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும்  உடனடியாக அவர்களது ஆதார் அடையாள அட்டைகளை அருகிலுள்ள சுகாதார நிலையங்களில் இனைத்துக் கொண்டு சிகிச்சை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

காச நோயை கட்டுப்படுத்த தனியார் மருத்துவ நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட முன் வந்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆதலால் ஆதார் இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை, பான் எண்களை இணைக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை