ஒத்திவாக்கம் ஏரியை சரியாக தூர்வாராததால் லாரிகளை சிறைபிடித்து போராட்டம்: அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒத்திவாக்கம் ஏரியை சரியாக தூர்வாராததால் லாரிகளை சிறைபிடித்து போராட்டம்: அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு

கூடுவாஞ்சேரி: சென்னை கூடுவாஞ்சேரி அருகே குமிழி ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்திவாக்கத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பிதான் பெரிய ஒத்திவாக்கம், சின்ன ஒத்திவாக்கம், இடையர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் உள்ள விவசாயிகள் பயிர் செய்கின்றனர்.

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாததால் ஏரி நிரம்பாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

ஏரியிலிருந்து மதகு வழியாக தண்ணீர் வரமுடியாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒத்திவாக்கத்தில் உள்ள பெரிய ஏரியில் தூர்வார்வதாக கூறி ஏரிக்கரையை பொதுப்பணித்துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதி மக்கள் திரண்டு வந்து 5 பொக்லைன் இயந்திரம், 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் லாரியில் பொக்லைன் இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு  சென்றனர்.



ஆனால் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி, “ஏரியை தூர்வாரும் வரை பொக்லைன் இயந்திரங்களை வெளியில் எடுத்து செல்லக்கூடாது” என்று டிரைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி வருவாய் ஆய்வாளர் பாலசுந்தரம், விஏஓ உள்ளிட்ட வருவாய்த்துறையினர் ஏரிக்கு விரைந்தனர்.

அப்போது அவர்களையும் பொதுமக்கள்முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சமாதான  பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “ஏரிக்கரையை பலப்படுத்தாமலும் சரிவர சீரமைக்காமலும் அலட்சிய போக்கில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.

கலெக்டர் நேரில் ஏரியை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

.

மூலக்கதை