மதுக்கடைக்கு எதிராக முற்றுகை போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மதுக்கடைக்கு எதிராக முற்றுகை போராட்டம்

திருவாரூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது.

திருவாரூர்: ஆத்தூர் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த 15ம் தேதி கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அலுவலர்கள் ஒரு வாரம் அவகாசம் கேட்டனர். கடையை அகற்றுவது குறித்து நேற்று டாஸ்மாக் அலுவலகத்தில் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

கடையை அகற்றுவதற்கு 3 மாதம் அவகாசம் வேண்டுமென அலுவலர்கள் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொள்ளாமல் கடை முன் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.



புதுகை: அறந்தாங்கி அடுத்த ரெத்தினக்கோட்டை அக்ரஹாரம் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டி நேற்று மதுக்கடை திறக்கப்பட இருந்தது. அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என வலியுறுத்தி அறந்தாங்கி - பேராவூரணி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அவர்களின் கோரிக்கையை டி. எஸ். பி தெட்சிணாமூர்த்தி ஏற்றுக்கொண்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில் ரெத்தினக்கோட்டை பகுதியில் மதுக்கடை அமைக்கவேண்டும் என வலியுறுத்தி அறந்தாங்கி -பட்டுக்கோட்டை சாலையில் சாமி நகர் பகுதியில் குடிமகன்கள்  100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அங்கு வந்த போலீசார், ‘உங்கள் கோரிக்கையை அறந்தாங்கி ஆர். டி. ஓவிடம் மனுவாக கொடுங்கள்’ என்றனர்.

இதன்பின் குடிமகன்கள், ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் சுரேஷிடம் மனு கொடுத்து சென்றனர்.

.

மூலக்கதை