அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களை தாக்கியது சிண்டி புயல் : பொதுமக்கள் கடும் பாதிப்பு

தினகரன்  தினகரன்

அமெரி்க்காவின் பல்வேறு இடங்களில் சிண்டி புயல் தாக்கத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடா, அலபமா, லூஸியா உள்ளிட்ட மாகாணங்களில் சிண்டி புயல் கடுமையாக தாக்கியுள்ளது. கனமழை பெய்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க வானிலை மையம் கூறியுள்ளது. மணிக்கு 85 கி.மீ வேகத்திற்கு சிண்டி புயல் வீசுவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். புயல் காரணமாக கல்ஃப் கடற்கரையில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. சிண்டி புயலானது டெக்சாஸ் மற்றும் லூஸியா பகுதியை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மழையால் ஏற்பட்ட வௌன்ளப்பெருக்கில் சிக்கிய குழந்தை ஒன்றை காவல்துறையினர் மீட்டனர். லூஸியானா மாகாண ஆளுநர் பேசுகையில், புயல் பிரச்சனை மிகவும் தீவிரமானது. நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றார். கடலோரம் மற்றும் தென்கிழக்கு பகுதி மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த மாநிலத்தையும் தாக்க போவதாக கூறினார்.      இந்த இயற்கை சீற்றம் காணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

மூலக்கதை