ஜனாதிபதி தேர்தல் திமுகவுக்கு புதிய சிக்கல்!

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
ஜனாதிபதி தேர்தல் திமுகவுக்கு புதிய சிக்கல்!

இந்திய ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் உள்ளது.


    பாஜக சார்பில் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளை திரட்டி பொது வேட்பாளரை நிறுத்த முயற்சித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பொதுவான கூட்டணி கட்சியாக உள்ளது.   ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு எம்எல்ஏக்கள், எம்பிக்களுடைய வாக்குகளும் மிக முக்கியமானவை.

ஆனால் திமுக எம்எல்ஏக்கள் 7 பேர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகலாம் என கூறப்படுகிறது. இது திமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

அப்போது திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் ரகளை செய்தனர். இதில் சட்டசபை சபாநாயகர் இருக்கை, மைக், ஆவணங்கள் சேதப்படுத்தப்பட்டது.

சபாநாயகர் சட்டை கிழிக்கப்பட்டது, அவரை கையை பிடித்து இழுத்து செல்ல விடாமல் தடுத்தனர், சபாநாயகர் இருக்கையில் திமுக உறுப்பினர்கள் அமர்ந்தார்கள் என பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.   இதனையடுத்து பிப்ரவரி 20-ஆம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் சபாநாயகரிடம் ஒரு கடிதம் ஒன்றை அளித்தார். அதில், அன்றைய தினம் சட்டசபையில் வன்முறையாக நடந்துகொண்ட ஆறு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவருகிறேன் என்று கூறியிருந்தார்.   திமுக உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்து வெற்றிவேல் கொடுத்த கடிதம் பேரவைத் தலைவரிடம் தற்போது இருக்கிறது.

அதன் மீதான நடவடிக்கை விரைவில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வருகிறது.

இதனால் இந்த ஏழு திமுக உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாதபடி சஸ்பென்ட் செய்யப்படலாம் என தகவல்கள் கசிந்துள்ளது.

.

மூலக்கதை