நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி: 6 மாதத்தில் கவிழ்ந்தது ரோமானியா அரசு

தினகரன்  தினகரன்

புசாரெஸ்ட்: தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ரோமானியாவில் இடதுசாரி அரசு ஆட்சி அமைத்து 6 மாதம் கூட ஆகாத நிலையில் அரசு கவிழ்ந்தது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரோமானியாவில் நடைபெற்ற தேர்தலில், சமூக ஜனநாயக கட்சி 46% வாக்குகள் பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் சார்பில் சோரின் கிரிண்டேனு பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் நாட்டின் வளர்சிக்கு பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அக்கட்சி உறுப்பினர்களே குரல் எழுப்பினர். உட்கட்சியில் ஏற்பட்ட அதிகாரப் போராட்டங்களைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிரதமர் உத்தரவிட்டார். இதனையடுத்து அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள 240 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் வெறும் 7 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால், அரசு கவிழ்ந்தது. மேலும் புதிய பிரதமராக க்ளோசஸ் யோஹானிஸ் முன்மொழியப்படலாம் என்றும் அவர் தனது தரப்பு ஆதரவை 10 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் நிரூபிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை