ஈராக்கின் 840 ஆண்டுகள் பழமைவாய்ந்த மசூதி, ஐஎஸ் இயக்கத்தினரால் வெடி வைத்து தகர்ப்பு..

தினகரன்  தினகரன்

மொசூல்: ஈராக்கின் மொசூலில் உள்ள 840 ஆண்டுகள் பழமைவாய்ந்த அல் நூரி மசூதியை ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தினர் வெடி வைத்து தகர்த்தனர். தி கிரேட் மொசுக் என்று அழைக்கப்படும் இந்த மசூதி ஈராக்கின் பொக்கிஷமாக கருதப்பட்டு வந்தது. பைசா கோபுரத்தை போல சாயும் தோற்றம் கொண்ட கோல் வடிவ கோபுத்தை கொண்ட அந்த பிரபலமான மசூதியில் ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி 2014-ம் ஆண்டு தனது இஸ்லாமிய ராஜியத்தை அறிவித்தார். மொசூல் நகரை ஐஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றியபோது வரலாற்று சிறப்புமிக்க இந்த மசூதி தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என அவர்கள் அறிவித்தனர். இந்த மசூதியை அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்கி அழித்து விட்டதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது. ஆனால் ஐ.எஸ் இயக்கமே தகர்த்துள்ளதாக ஈராக் அரசு அறிவித்துள்ளது.

மூலக்கதை