பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. அம்மா அணி ஆதரவு; ராம்நாத்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. அம்மா அணி ஆதரவு; ராம்நாத்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிப்பு

அவர் கவர்னர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.  பாரதீய ஜனதா கூட்டணிக்கு கூடுதல் ஓட்டு மதிப்பு இருப்பதால் ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தி.மு.க. போன்ற பிரதான எதிர்க்கட்சிகளை பாரதீய ஜனதா தலைவர்கள் நேரிலும், தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு நடந்தது.கூட்டம் முடிந்ததும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19–ந் தேதி அன்று மதியம் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள ராம்நாத் கோவிந்தை ஆதரிக்குமாறு கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையின் அடிப்படையில் இதுகுறித்து தலைமை கழக நிர்வாகிகள், தலைமை பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒருமனதாக பிரதமர் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுகிற விதமாக பாரதீய ஜனதாவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தை ஏகமனதாக ஆதரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே ராம்நாத் கோவிந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில், அ.தி.மு.க. (அம்மா) அணியும் அவரை ஆதரிக்க முன்வந்துள்ளதால், அவரது வெற்றி வாய்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை