பயங்கரவாதிகளுக்கு உதவுவது யார்? இந்தியா கேள்வி

தினமலர்  தினமலர்
பயங்கரவாதிகளுக்கு உதவுவது யார்? இந்தியா கேள்வி

ஐ.நா.,: ஆப்கனில் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கு ஆயுதம், வெடிபொருட்கள், பயிற்சி, நிதியுதவி எங்கிருந்து கிடைக்கிறது என ஐ.நா.,வுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: நாம் , பயங்கரவாதத்தில் நல்லது, கெட்டது என வேறுபடுத்த கூடாது. அல்லது ஒரு அமைப்பிற்கு எதிராக மற்றொரு அமைப்பை தூண்டிவிடக்கூடாது. இதன் அடிப்படையில் தான் தலிபான், ஹக்கானி, அல் கொய்தா, டாயிஸ், லஷ்கர், ஜேஇஎம் போன்ற பயங்கரவாத அமைப்புகளை கருதி, அவற்றை நியாயபடுத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த இடத்திலும், எந்த நிலையிலும் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடங்கள் கிடைப்பதை தடுக்க வேண்டும். இதனை சர்வதேச சமுதாயம் உறுதி செய்ய வேண்டும். தலிபான் அமைப்பிற்கு நிதியுதவி ஏற்படுத்தி கொடுத்தது யார் என்பதை ஐ.நா.,வுக்கு நன்கு தெரியும் இவ்வாறு அக்பருதீன் கூறினார்.

மூலக்கதை