பிரஷால் மனைவியை கொன்ற நபர்

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: கழிவறையை சுத்தம் செய்ய டூத் பிரஷை பயன்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த கணவர், மனைவியை கொலை செய்தார்.
அமெரிக்காவின் மில்வாக்கி நகரத்தை சேர்ந்தவர் யூஜின் மேல்ப்ளோவர், 42. இவர் பல் விலக்கும் டூத் பிரஷை வைத்து, இவரது மனைவி கழிவறையை சுத்தம் செய்வது வழக்கம். இதனால் கோபம் அடைந்த யூஜின், அந்த டூத் பிரஷை கொண்டே கொடூரமாக தாக்கி கொலை செய்தார்.அவர் அளித்த வாக்கு
மூலத்தில், 'மனைவியின் பல்லை பலமுறை கழிவறை கிண்ணத்தில் அடித்து உடைத்தேன். தொண்டையில் டூத் பிரஷால் தாக்கினேன்' என கூறி உள்ளார்.
போலீசார் அளித்த அறிக்கையில், 'அவரது உடலில் 126 இடங்களில் காயம் இருந்தது. அது டூத் பிரஷால் ஏற்பட்டது' என தெரிவித்துள்ளனர்.
சட்ட வல்லுனர்களை கூறுகையில், 'யூஜீன் தான் செய்த தவறை நினைத்து மன்னிப்பு கேட்டால் குறைந்தபட்சம் 15 ஆண்டு, அதிகபட்சம் 60 ஆண்டு
தண்டனை கிடைக்கும்' என்றனர்.

மூலக்கதை