அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : பலியாகும் குழந்தைகள்

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆண்டுக்கு 1,300 குழந்தைகள் துப்பாக்கிச்சூட்டில் இறப்பதாக தெரிந்துள்ளது.
இறப்பவர்களில் ஒரு வயது முதல் 17 வயது வரை உள்ளனர். இவர்களில் 3 சதவீத குழந்தைகள்
சம்பவ இடத்திலேயே இறந்து விடுகின்றனர். மீதி 15 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இறப்பவர்களில் 82 சதவீதம் பேர் ஆண் குழந்தைகள் எனவும் தெரிகிறது. இறக்கும் குழந்தைகளில் அதிகம் பேர் ஆப்ரிக்கா, அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என தெரிந்துள்ளது. இந்த அறிக்கையை சீனாவைச் சேர்ந்த சின்குயா நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு தேசிய அளவில் குழந்தைகள் வன்முறைக்கு எதிராக எடுக்கப்பட்ட ஆய்வில், 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 4.2 சதவீதம் பேர் துப்பாக்கிச் சூட்டில் இறக்கின்றனர்.

மூலக்கதை