நேற்றுதான் சொன்னாங்க: அனில் கும்ப்ளே

தினகரன்  தினகரன்

‘நீங்கள் பயிற்சியளிக்கும் விதம் கேப்டன் விராத் கோஹ்லிக்கு பிடிக்கவில்லை. நீங்கள் தலைமை பயிற்சியாளராக நீடிப்பதையும் அவர் விரும்பவில்லை’ என்று கிரிக்கெட் வாரியம் நேற்று தான் முதல் முறையாக எனக்கு தெரியப்படுத்தியது. எங்கள் இருவருக்கும் இடையே சமரசம் செய்துவைக்க பிசிசிஐ மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி. இதற்கு மேலும் ‘தாக்குப்பிடிக்க’ முடியாது என்பதால் தான் பதவி விலக முடிவு செய்தேன். என் மீது நம்பிக்கை வைத்த கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்தியாவின் கிரிக்கெட் பாரம்பரியத்தை போற்றிக் காக்கும் நலம் விரும்பியாகவே எப்போதும் இருப்பேன்.

மூலக்கதை