இங்கிலாந்து இளவரசர் பிலிப் சிகிச்சையில் சேர்ப்பு

தினகரன்  தினகரன்

லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து ராணி 2வது எலிசபெத். இவரது கணவரும், இளவரசருமான பிலிப் (96), உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளவரசர் பிலிப் நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் நேற்று முன்தினம் இரவு அவர் லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் துடிப்பாக செயல்படும் இளவரசர் பிலிப் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் நேற்று நடந்த நாடாளுமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இளவரசர் சார்லஸ், அவரது தாயாருடன் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என அவர் தெரிவித்திருந்தார். இளவரசர் பிலிப் கோடைக்காலத்துக்கு பின் அரச பணிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். நேற்று முன்தினம் நடந்த ராயல் அஸ்காட் ரேசில், ராணி இரண்டாவது எலிசபெத்துடன் இளவரசர் பிலிப் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை