பிலிப்பைன்சில் பள்ளிக்குள் புகுந்து சிறைப்பிடித்த மாணவர்களை விடுவித்தனர் தீவிரவாதிகள்

தினகரன்  தினகரன்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளியில் புகுந்த ஐஎஸ் தீவிரவாதிகள் அங்கிருந்த மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். நீண்ட பேச்சுவார்த்தை பின்னர் அவர்களை விடுவித்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதரவு பெற்ற குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. இவர்களை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களை குறிவைத்து ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் தெற்கு பிலிப்பைன்சில் உள்ள பிக்கவ்யான் பகுதியில் இயங்கிவரும் பள்ளியில் நேற்று அதிரடியாக ஐஎஸ் தீவிரவாதிகள் நுழைந்தனர். அங்கு வகுப்பறைகளில் இருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஊழியர்களை தீவிரவாதிகள் சிறைப்பிடித்தனர். தகவல் அறிந்த ராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்தனர். ஆனால் மாணவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருப்பதால் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. எனினும் தீவிரவாதிகளிடம் சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பள்ளிக்குள் இருக்கும் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் பேச்சுவார்த்தை நடத் தினர். இதைத்தொடர்ந்து மாணவர்களை அவர்கள்  விடுவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை