பிரஸ்செல்ஸ் ரயில் நிலையத்தில் தீவிரவாதி வெடிகுண்டு தாக்குதல் போலீசார் சுட்டுக்கொன்றனர்

தினகரன்  தினகரன்

பிரஸ்செல்ஸ்: பெல்ஜியத்தில் ரயில் நிலையம் ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதியை போலீசார் சுட்டுக்கொன்றனர். இதில் யாரும் காயமடையவில்லை. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில்தலைநகர் பிரஸ்செல்ஸில் உள்ள முக்கியமான, மத்திய ரயில் நிலையத்திற்குள் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். பயணிகள் ்காத்திருப்பு அறைக்குள் நுழைந்த அவர், தான் வைத்திருந்த பெட்டியில் இருந்து எதையோ எடுத்து யாரும் எதிர்பார்க்காத நிலையில் வெடிக்கச் செய்தார். இதனால் ஒரு புறம் தீப்பற்றி எரிந்தது. பாதுகாப்புப் படை வீரர்கள் வெடிவிபத்து ஏற்படுத்திய நபரை துப்பாக்கியால் சுட்டனர். அவரை சோதனை செய்ததில் இடுப்பில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட பெல்ட் அணிந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அவை செயலிழக்க வைக்கப்பட்டன. தாக்குதல் நடத்திய தீவிரவாதி, மொராக்ேகாவைச் சேர்ந்தவர் என்பதும், அவரது ரகசிய பெயர் ‘ஓ இசட்’ என்றும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை