குடும்ப வரி விதிப்பால் சவுதியை விட்டு வெளியேற இந்தியர்கள் முடிவு

தினகரன்  தினகரன்

ரியாத்: சவுதியில் 5 ஆயிரம் ரியால் (ரூ.86 ஆயிரம்) சம்பளம் வாங்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்குவதற்கு குடும்ப விசா வழங்கப்படுகிறது. தற்போது 41 லட்சம் இந்தியர்கள் ஐ.டி, மருத்துவம் உட்பட பல துறைகளில் பணியாற்றுகின்றனர். எண்ணெய் வளமிக்க நாடு என்பதால் செல்வச் செழிப்பில் சவுதி அரேபிய இருந்து வந்தது. தற்போது நிலைமை மாறி வருகிறது.  இதனால் வருவாயை பெருக்க சவுதியில் பணியாற்றும் வெளிநாட்டினர் குடும்பத்துடன் சவுதியில் வசித்தால் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் குடும்ப வரி விதிக்க சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.அவற்றின் விவரம்:குடும்ப வரி வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மாதம் 100 ரியால்(ரூ.1,723) வரி செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த வரி 100 சதவீதம் உயர்த்தப்படும். 2020ம் ஆண்டு வரை இந்த வரியை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இது பெரும்பாலான இந்திய தொழிலாளர்களுக்கு கட்டுபடியாகாது. அதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தினரை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டு, சவுதியில் தனியாக பணியாற்ற முடிவு செய்துள்ளனர்.

மூலக்கதை