சவுதி மன்னரின் 31வயது மகன் புதிய இளவரசராக நியமனம்

தினகரன்  தினகரன்

ரியாத்: சவுதி அரேபியா மன்னராக இருப்பவர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சவுத். அங்கு இளவரசராக இருந்தவர்  முகமது பின் நயீப்(57). இந்த நிலையில் திடீரென நேற்று இளவரசர் பதவியில் இருந்து முகமது பின் நயீப் நீக்கப்பட்டார். புதிய இளவரசரை தேர்வு செய்வது தொடர்பாக ெமக்காவில் உள்ள அல் சபா மாளிகையில் சவுதி அரசரின் வாரிசு குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மொத்தமுள்ள 34 உறுப்பினர்களில் 31 பேர் மன்னரின் மூத்த மகன் முகமது பின் சல்மானுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து, முகமது பின் சல்மானை புதிய இளவரசராக அவரது தந்தையும் சவுதி அரசருமான சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சவுத் நியமித்தார்.

மூலக்கதை