ஊழல் குற்றச்சாட்டில் François Bayrou!! - பதவி விலகல்!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஊழல் குற்றச்சாட்டில் François Bayrou!!  பதவி விலகல்!!

இன்று புதன்கிழமை நீதித்துறை அமைச்சர் François Bayrou பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 
 
இம்மானுவல் மக்ரோனின் தலைமையிலான அரசில், MoDem கட்சியைச் சேர்ந்த François Bayrou நீதித்துறை அமைச்சராக பதவியேற்றார். பதவி ஏற்று 34 நாட்கள் மாத்திரமே ஆன நிலையில், இன்று பதவி விலகுவதாக அறிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்தாம் குடியரசின் மிக குறுகிய கால அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள இராணுவ அமைச்சர் Sylvie Goulard நேற்றைய தினம் பதவி விலகியிருந்தார். அதைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளுக்கான அமைச்சர் Marielle de Sarnez மற்றும், நீதித்துறை அமைச்சர் François Bayrou ஆகிய இருவரும் பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ளனர். 
 
இம்மானுவல் மக்ரோனின் En Marche கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்திருந்தாலும், இந்த ஊழல் குற்றசாட்டுக்கள் இதற்கு முன்னர் ஏற்பட்டதாகவும், MoDem கட்சி உறுப்பினர்கள் பலர் இந்த வழக்கில் சிக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், 'தாம் அரசை விட்டு வெளியேறி தன் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிப்பேன்!' என அவர் அறிவித்துள்ளார். இன்று இரவு பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர்  Edouard Philippe நேர்காணல் ஒன்றை வழங்க உள்ளார். இதில் இந்த புதிய சர்ச்சை குறித்த கருத்துக்களை பகிர்ந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை