‘ஊபர்’ சி.இ.ஓ., கலானிக் ராஜினாமா

தினமலர்  தினமலர்
‘ஊபர்’ சி.இ.ஓ., கலானிக் ராஜினாமா

டெட்ராய்ட் : அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, ‘ஊபர்’ டெக்­னா­ல­ஜிஸ் நிறு­வ­னம், வாடகை கார் சேவையை, பய­ணி­யர் பெற உதவி வரு­கிறது.

டிரா­விஸ் கலா­னிக், தன் நண்­பர் காட் காம்ப் உடன் இணைந்து, 2009ல் துவக்­கிய இந்­நி­று­வ­னம், குறு­கிய காலத்­தில், 7,000 கோடி டாலர் மதிப்­புள்­ள­தாக உயர்ந்­துள்­ளது. இந்­நி­லை­யில், சமீ­ப­கா­ல­மாக, அலு­வ­லக பணி­யா­ளர்­களின் பாலி­யல் புகார்­கள், சாப்ட்­வேர் மோசடி, அரசு விதி­மீ­றல் என, பல நெருக்­க­டி­க­ளுக்கு, ஊபர் ஆளாகி உள்­ளது. இத­னால், இந்­நி­று­வ­னத்­தின் பங்கு மதிப்பு சரி­யத் துவங்­கி­யதை அடுத்து, முத­லீட்­டா­ளர்­கள், டிரா­விஸ் கலா­னிக் பதவி விலக வேண்­டும் என, வற்­பு­றுத்தி வந்­த­னர்.

இந்­நி­லை­யில், சமீ­பத்­தில், படகு விபத்­தில், டிரா­விஸ் கலா­னிக் தாய் பலி­யா­னார். இத­னால், பெரி­தும் பாதிக்­கப்­பட்ட டிரா­விஸ், நேற்று முன்­தி­னம், ஊபர் நிறு­வ­னத்­தில் வகித்து வந்த, சி.இ.ஓ., எனப்­படும், தலைமை செயல் அதி­காரி பத­வி­யில் இருந்து வில­கி­னார். எனி­னும், இயக்­கு­னர் குழு­வில் நீடிக்­கும் இவர், ஊபர் வளர்ச்­சிக்­காக தொடர்ந்து ஆலோ­ச­னை­களை வழங்­கு­வேன் என, தெரி­வித்து உள்­ளார்.

மூலக்கதை