சர்வதேச விளம்பர சந்தை: இந்தியாவுக்கு 10வது இடம்

தினமலர்  தினமலர்
சர்வதேச விளம்பர சந்தை: இந்தியாவுக்கு 10வது இடம்

புதுடில்லி : மேக்னா நிறு­வ­னம், இந்­திய விளம்பர சந்தை குறித்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: கடந்­தாண்டு, இந்­திய விளம்­பர சந்­தை­யின் வளர்ச்சி, 11.8 சத­வீ­த­மாக இருந்­தது. இது, இந்­தாண்டு, 13.5 சத­வீ­த­மாக உய­ரும் என, ஏற்­க­னவே மதிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. ஆனால், அடுத்த மாதம் அறி­மு­க­மா­கும், ஜி.எஸ்.டி.,யின் தாக்­கத்­தால், விளம்­பர சந்­தை­யின் வளர்ச்சி, 11.5 சத­வீ­தம் என்ற அள­விற்கே இருக்­கும் என, மறு­ம­திப்­பீடு செய்­யப்­பட்டு உள்­ளது.

இருந்த போதி­லும், உல­கின் மிகப்­பெ­ரிய விளம்­பர சந்தை உள்ள, 10 நாடு­களில் ஒன்­றாக, இந்­தாண்டு, இந்­தியா முன்­னே­றும். கடந்த ஆண்டு, இந்த இடத்தை, இத்­தாலி பிடித்­தி­ருந்­தது. இந்­தாண்டு, இந்­தி­யா­வின் விளம்­பர செல­வி­னம், 56,400 கோடி ரூபா­யாக இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

அடுத்த ஆண்டு, இந்­திய விளம்­பர சந்­தை­யின் வளர்ச்சி, 12.5 சத­வீ­த­மா­க­வும், 2019ல், 14 சத­வீ­த­மா­க­வும் இருக்­கும். இந்த வளர்ச்­சிக்கு, உலக கோப்பை கிரிக்­கெட் போட்டி, பொதுத் தேர்­தல் உள்­ளிட்­டவை துணை புரி­யும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை