நாளை வியாழக்கிழமை இல்-துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!

PARIS TAMIL  PARIS TAMIL
நாளை வியாழக்கிழமை இல்துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!

 

பரிசிலும் இல்-து-பிரான்சிலும் அதியுச்ச வளிமண்டல மாசடைவு இருப்பதனால், நாளை வியாழக்கிழமை, இல்-து-பிரான்ஸ் எங்கும் நாள் முழுவதும், அனைத்துப் பொதுப் போக்குவரத்துகளிலும் பயணிக்க 3.80€ பயணச்சீட்டு மட்டுமே போதுமானது. 
 
முன்பு வளிமண்டல மாசவைடவு நாளில் இலவசமாக்கப்பட்ட பொதுப் போக்குவரத்துக்களிற்குக் கடந்த சில காலங்களாக இந்த விசேடப் பயணச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
நாளைய தினம் வளிமண்டல மாசடைவு பிரகடணப்படுத்தப்பட்டமையால், இந்த விசேடப் பயணச்சீட்டு நாளை செல்லுபடியாகும் எனவும், இதன்மூலம் இல்-து-பிரான்சின் எந்தப் பகுதிக்கும் பயணிக்க முடியும் எனவும், இல்-து-பிரான்ஸ் மற்றும் Stiff இன் தலைவி வலரி பெக்ரஸ் தெரிவித்துள்ளார்.
 

 

மூலக்கதை