அவதானம்!! - பரிஸ் - நாளை குறிப்பிட்ட வாகனங்களுக்கு தடை!

PARIS TAMIL  PARIS TAMIL
அவதானம்!!  பரிஸ்  நாளை குறிப்பிட்ட வாகனங்களுக்கு தடை!

அதிக சுற்றுச்சூழல் மாசடைவு காரணமாக, நாளை வியாழக்கிழமை பரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், குறிப்பிட்ட சில வாகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இல்-து-பிரான்ஸ் மாகாணம் முழுவது கடந்த திங்கட்கிழமை முதல் அதிக சுற்றுச்சூழல் மாசு நிலவி வருவதால், காவல்துறை தலைமைச் செயலகம் நாளை வியாழக்கிழமை போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வானங்கள் வெளியிடும் மாசின் அளவை குறிப்பிட்டு 0 இல் இருந்து 5 வரை வகைப்படுத்தியிருந்தமையும், அதுகுறித்த Crit'Air ஒட்டிகளையும் வாகங்களில் ஒட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து நாளை குறித்த வாகங்களில் 4 மற்றும் 5 ஆம் எண்களை கொண்ட அதிக மாசு வெளியிடும் வாகனங்களுக்கு முற்றாக தடைவிதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, இதுவரை இந்த ஒட்டிகள் ஒட்டப்படாத வாகனங்களுக்கும் தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வாகங்களில் 0 தொடக்கம் 3 வரையான வாகங்கள் மட்டுமே நாளை வியாழக்கிழமை காலை 5.30 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை பரிசுக்குள் செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை