ஆசனம் செய்வோம்; ஆரோக்கியமாக வாழ்வோம்: இன்று உலக யோகா தினம்

தினமலர்  தினமலர்
ஆசனம் செய்வோம்; ஆரோக்கியமாக வாழ்வோம்: இன்று உலக யோகா தினம்

காவா? சாமியார்களும் முனிவர்களும் தெருவில் வித்தை செய்வோரும் செய்யக்கூடியது. வேலை வெட்டி இல்லாதவர்களை போய் பாருங்க. எங்களை வந்து உயிரை
வாங்காதீர்கள்!'-இவை எல்லாம், முன்புதமிழ்நாடு மக்களிடையே யோகாசனத்திற்கு இருந்த வரவேற்பு வாசகங்கள்.பள்ளிக் குழந்தைகளிடையே, பொது மக்களிடையே இந்த வித்தைகளை செய்துக் காட்டி இதற்கு பெயர்தான் யோகாசனம். இதை செய்வதால் உடம்பிற்கு நல்லது. மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். நோய் வராமல் பாதுகாக்கும். வந்த நோயை போக்கும் என்றெல்லாம் முன்பு விளக்கினோம்.
பாமர மக்களும் உணரும் வண்ணம் 1988 ஜூலையில் மூன்று நாட்கள் மதுரையில் முதல்யோகாசன மாநாடும், குழந்தைகளுக்கான யோகாசன போட்டியும் நடத்தி அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

ஐ.நா., அங்கீகாரம்



இப்போது தமிழகம்மட்டுமின்றி, உலகம் முழுவதும் யோகாவை விழிப்புடனும், மகிழ்ச்சியுடனும், ஆழ்ந்தசிந்தனையுடனும் நம் முன்னோர்கள் செய்து வந்த யோகாசனம், உடற்கூறு விஞ்ஞான கலை என்று ஏற்றுக் கொண்டுள்ளது.உலகத்தில் மனிதனாக பிறந்த அனைவருமே ஜாதி, மதம், மொழி, இனம் கடந்த இனிய மார்க்கமாகவே யோகாசனத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஐ.நா.சபையே ஜூன் 21ஐ உலக யோகா தினமாக கொண்டாடவும் கட்டாயம் மனித குலத்திற்கே மருந்தில்லா மருத்துவ பயிற்சி யோகாசனமே என்பதை பறைசாற்றியுள்ளது.

நம்மை அறியாமலே பயன்


நம் முன்னோர்கள் முழுமையாக செயல்திறன் மிக்கவர்கள். இதை தான் யோ கர்மஸீ கெளலசம் (பகவத்கீதை) - செயலில் திறமையே யோகம் - என்கிறது. உடல் ஆரோக்கியமாக, வலிமையாக இருந்தால் மனதிடம் அதிகமாகும். மனதிடம்அதிகமானல் செயல்திறன் கூடும். உடல், மனம், எண்ணம் ஒருங் கிணைந்து செயல்பட்டால் நாம் ஒழுக்க சீலராக வாழ்வோம். நம் திறமை மேம்பட்டு நம்மை உயர்நிலைக்கு கொண்டு செல்லும். இதுவே உன்னதமான வாழ்வாக அமையும். நம்மை அறியாமலே இது அனைத்தையும் யோகாசனப் பயிற்சி மூலம் நமக்கு கிடைக்கும்.

வெற்றிக்கு வழி



யோகாசனத்தின் முழுபலன் நோயற்ற தன்மை, நோய்களை போக்கும் தன்மை, மனதை அடக்கி ஆளும் தன்மை ஒருங்கே அமையப்பெற்றது. இதை தான் ஒருங்கிணைத்தல் என்று சொல்வர். இதையே யோகா, யோக், யோகம் என்றெல்லாம் கூறுகிறோம். ஆசனம் என்பது இருக்கை நிலைகள்.
ஆசனத்தில் அமர்ந்து மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்துவதால் யோகாசனம் என்று கூறுகிறோம். மிகவும் எளிதான பயிற்சிகள் உண்டு. யோகாசனம் செய்தால் நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தன்மை கூடுகிறது. நரம்பு மண்டலம் புத்துணவு பெறுகிறது. தசைநார்கள் உறுதியடைந்து ரத்த நாளங்களின் செயல்திறனை கூட்டுகிறது. நாள்முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக இயங்க செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். மனம், உடல் வலிமை பெறும். வேறென்ன வேண்டும் நமக்கு. உழைக்க உடம்பும், மன உறுதியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

பழக்கவழக்கங்களில் மாற்றம்


உணவுக் கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாடு, உடல் கட்டுப்பாடு என்று எதுவுமே இல்லை. நீங்கள் யோகாசனம் செய்ய செய்ய தானாக, தனிச்சையாக இந்த உடம்பிற்கு எது நல்லதோ அதை மனம் விரும்பி ஏற்றுக் கொள்ளும். குடிப்பழக்கம், புகைப்பழக்கம் உள்ளவரா? கவலை வேண்டாம். நீங்கள் குடிக்காத போது

யோகாசனம் செய்யுங்கள்.


நாளடைவில் அப்பழக்கம் நம் உடம்பிற்கு தேவைதானா? என உணர்ந்து நீங்களே விட்டுவிடுவீர்கள். எது வேண்டும், எது வேண்டாம் என்பதை யோகாசனத்தின் மூலம் உணரலாம்.

வருத்தம் நன்மை தரும்


உடலையும், மனதையும் பல ஆண்டுகள் தியாகம் செய்து பொருள் ஈட்டுகிறோம். பின் ஈட்டிய பொருளை இந்த உடம்பிற்கு தியாகம் செய்தும், பிழைக்க வைக்க
முடியாமல் மருத்துவர்கள் எங்களால் முடிந்ததை செய்துவிட்டோம், இனி இறைவன் கையில் தான் உள்ளது, என்பர். கடைசி நேரத்தில் இறைவனையும் நினைத்து நாம் வருத்தப்படும் நிலையில், அவரும் கைவிட்டுவிட்டார் என்று கூறுவோம். இதை தான் முன் யோசனையுடன் நம் முன்னோர்கள்
தெய்வத்தால் ஆகாது எனினும்,முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும்'என்றனர்.நீங்கள் மெய்யை (உடம்பை) வருத்தி எவ்வளவு நேரம் யோகா பயிற்சி செய்கிறீர்களோ, அந்த
அளவுக்கு நாளமில்லா சுரப்பிகளின் இயக்க தன்மை கூடும். நரம்புகள் புத்துணர்வு பெற்று உடம்மை நோயற்ற தன்மைக்கு இட்டுச்செல்லும் என்பதே இதன் பொருள்.

சமச்சீர் மனநிலை


உணர்ந்து செய்தால் உயர்வு பெறுவோம். விருப்பு வெறுப்பு இன்றி வாழக்கற்றுக்கொள்ளுங்கள்.யாரிடமும் எதையும் அதிகம் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால் ஏமாற்றம் வரும். ஏமாற்றம் வந்தால் கோபம் வரும். கோபம் வந்தால் ரத்தம் சூடேறி இருதயத் துடிப்பு குறைந்து, மன அழுத்தம் அதிகரிக்கும்.
நுரையீரலின் இயக்கத்தன்மை குறைந்து ஆக்சிஜன் உள்ளே செல்ல தடுமாறி கார்பன்டை ஆக்சைடு வெளியேற தடைபெற்று, தேவையற்ற அமிலங்கள் சுரந்து அல்சர் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் வழிவகுக்கும். இது வேண்டுமா நமக்கு?
யோகாசனம் செய்வதால் மேற்கூறிய மனநிலை சமசீர் அடையும். இதன் மூலம் உடல் உபாதைகளில்இருந்து விடுதலை கிடைக்கும். இந்த உலகத்தில் எல் லோரிடமும் ஏதாவது ஒரு பலவீனம் இருக்கத்தான் செய்யும். அந்த பலவீனத்தை நாம் அனுசரித்து, அனுமதித்து அல்லது அவர்களை விட்டு ஒதுக்கி
வாழ்வதே மேலானது. எந்த துன்பமும் உங்களை வந்து சேராது. இயல்பான வாழ்வு முறையில் வாழ்வோம். வெளியில் உள்ள நம்மால் கண்டுபிடிக்கப்பட்ட
கருவிகளை வைத்து ஆய்வு செய்யும் முறையே விஞ்ஞானம் எனப்படுகிறது.

வியக்கும் உலகம்


நம் உடம்பில் உள் இருக்கும் நுண்கருவிகளாகிய நாளமில்லா சுரப்பிகள், பெருமூளை, சிறுமூளை நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகள், கல்லீரல்,
மண்ணீரல், பித்தப்பை, கருப்பை, இரைப்பை, நுரையீரல்கள், இருதயம், ரத்த நாளங்கள் அனைத்தையும் உள்ளிட்ட இயற்கை கருவிகளை வைத்து ஆய்வு செய்வது மெய்ஞானம் முறை என்று நம் சித்தர்கள், வெளிஉலகத்தை விஞ்ஞானமாகவும், உள்முகஞானத்தை மெஞ்ஞானமாகவும் அறிந்து உணர்ந்து உள்ளனர் என்பதை உலகமே வியக்கிறது.
யோகாசனத்திற்கு இப்போது உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது. நம் இந்திய மக்களுக்கே பெருமைக்குரியது. யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதால் நம்முடைய கலாசாரபண்பாடுகளை உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது. தனி மனிதனுடைய மனப்பக்குவமே உலக அமைதிக்கு வழிவகுக்கும். ஜாதி, மதம், மொழி, இனங்கள் ரீதியாக பிரிந்த மனித இனத்தை 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற முது மொழிக்கேற்ப உலகத்தை ஓர் இனமாக்கியது நம் யோகாசனமே.
நேரமில்லை என்று சொல்லாமல் தினமும் 30 நிமிடங்கள் யோகாசனம் செய்து உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உணவே மருந்தாகட்டும், உணர்வே தியானமாகட்டும்.
ஆசனங்களை மிஞ்சிய வைத்தியமில்லை. ஆண்டவனை மிஞ்சிய வைத்தியருமில்லை.யோகி. நீ.ராமலிங்கம் சுவாமி சிவானந்தயோகாசன ஆய்வு மையம்
மதுரை. 93441 18764

மூலக்கதை