அமெரிக்காவில் சோகம்: ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற சிறுவன் கரடி தாக்கி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் அலாஸ்கா மாநிலத்தில் கடந்த 19ம் தேதி நடத்த ஓட்டப்பந்தய போட்டியில் கரடி தாக்கி சிறுவன் உயிரிழந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. மலைப்பகுதியில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற சிறுவன் அடர்ந்த காட்டுப்பகுதி அருகே ஓடும் போது திடீரென கரடி ஒன்று வந்து தாக்கி அச்சிறுவனை இழுத்துச் சென்றது.  தாக்கிய இடம் செங்குத்தாக இருந்ததால் பாதுகாப்பு வீரர்களால் அச்சிறுவனை காப்பாற்ற முடியாமல் போனது. அதிகாரிகள் கரடியை துப்பாக்கியால் சுட்ட போது அந்த கரடி தப்பி ஓடி விட்டது. அச்சிறுவனின் உடல் சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டது. சிறுவனின் உடலை கைப்பற்றி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுவனின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை