ஜோந்தாமினர்களுக்கு நன்றி சொல்லி கடிதம் எழுதிய இளைஞனின் பெற்றோர்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜோந்தாமினர்களுக்கு நன்றி சொல்லி கடிதம் எழுதிய இளைஞனின் பெற்றோர்கள்!!

ஜோந்தாமினர்களுக்கு நன்றி சொல்லி பெற்றோர்களால் கடிதம் அனுப்பப்பட்ட சுவாரஷ்ய சம்பவம் ஒன்று இந்த வாரத்தில் இடம்பெற்றுள்ளது. 
 
கடந்த வியாழக்கிழமை  Indre- Et-Loire  பகுதியில் மகிழுந்தில் அதி வேகமாக சென்ற இளைஞன் ஒருவனை ஜோந்தாமினர்கள் நிறுத்தியுள்ளார்கள். 80 கிலோமீட்டர்கள் வேகத்தில் மாத்திரமே பயணிக்கக்கூடிய வீதியில் 125 கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணித்ததால் ஜோந்தாமினர்கள் குறித்த இளைஞனின் மகிழுந்தை நிறுத்தி, வாகன சாரதி அனுமதி பத்திரத்தை இரத்துச்செய்துள்ளார்கள். ஆனால் குறித்த இளைஞன், தாம் முதுகலைப் பட்டத்துக்கான பரீட்சைக்கு செல்வதாக தெரிவிக்க, ஜோந்தாமினர்கள் குறித்த இளைஞனை ஜோந்தாமினர்களின் வாகனத்தில் ஏற்றி பரீட்சை மண்டபத்தில் சேர்த்துள்ளார்கள். 
 
அதன் பின்னர், குறித்த இளைஞனின் பெற்றோர்கள் Indre- Et-Loire ஜோந்தாமினர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள். அதில், பரீட்சை நன்றாக எழுத முடிந்ததற்கு காரணமாக இருந்த ஜோந்தாமினர்களின் இரக்க குணத்துக்கும், மனிதாபிமானத்துக்கும் எங்களது நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்கள். குறித்த கடிதம் Indre- Et-Loire காவல்துறையினரின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

மூலக்கதை