நான் பயிற்சியாளராக இருப்பது கேப்டனுக்கு பிடிக்கவில்லை: ராஜினாமா செய்த அனில் கும்ப்ளே விளக்கம்

தினகரன்  தினகரன்

டெல்லி: இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலிக்குப் பிடிக்காததால், அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அனில் கும்ப்ளே அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனக்குமுறல்களை வெளியிட்டு, அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அனில் கும்ப்ளே குறிப்பிட்டுள்ளார். மேலும் கிரிக்கெட் வாரிய நிர்வாகம் தன் மீது நம்பிக்கை வைத்ததற்காக தான் கெளரவமடைந்ததாகவும், கடந்த ஓராண்டில் அடைந்த சாதனைகளுக்கு அணியின் கேப்டன், வீரர்கள், பயிற்சி மற்றும் துணை ஊழியர்களுக்கே எல்லா பெருமைகளும் சென்றடையும் எனவும்  தெரிவித்துள்ளார்.ஆனால் நான் செயல்படும் விதம் கேப்டனுக்குப் பிடிக்கவில்லை என்பதால் நான் பதவி விலகுகிறேன் என்றும் நான் தொடர்ந்து தலைமைப் பயிற்சியாளராக நீடிப்பதை அவரும் விரும்பவில்லை என்றும் கும்பே தெரிவித்துள்ளார். பிசிசிஐ நிர்வாகத்தின் சார்பில் முதல் முறையாக நேற்று இந்த விஷயம் எனக்கு தெரியவந்தது. அதைக் கேட்டதும் நான் ஆச்சரியமடைந்தேன் என்று கும்ப்ளே தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார். கேப்டனுக்கும் எனக்கும் இடையிலான குழப்பத்தைத் தீர்த்து வைக்க பிசிசிஐ நிர்வாகம் முயற்சி செய்தாலும் கூட, அது மீண்டும் சேர முடியாத அளவுக்குப் போய்விட்டது. அதனால், விலகிச் செல்வதே நல்லது என நான் நம்புகிறேன்\'என்று கும்ப்ளே தனது முடிவை அறிவித்திருக்கிறார். இந்தக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கிரிக்கெட் வாரியம் விரும்பும் நபரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைப்பதே சரியானது என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை