உலகம் முழுவதும் களைகட்டும் சர்வதேச யோகா தினம்

தினமலர்  தினமலர்
உலகம் முழுவதும் களைகட்டும் சர்வதேச யோகா தினம்

லண்டன் : உலகம் முழுவதம் சுமார் 180 நாடுகளில் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
லண்டனில் உள்ள டிராபல்கர் ஸ்கொயர் பகுதியில் நூற்றுக்கணக்னோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். இதே போன்று ஐ.நா., தலைமையக வளாகம், செர்பியா, டோக்கியோ ஆகியவற்றில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு, யோகா செய்தனர்.
தெற்கு அமெரிக்காவின் சிலி மற்றும் அர்ஜெண்டினா பகுதியில் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அப்பகுதி மக்கள் யோகா செய்தனர். தென்னாப்பிரிக்காவின் சோவிடோ பகுதியில் சுமார் 1200 கலந்து கொண்டு ஆசனங்கள் செய்தனர். இவர்கள் அனைவரும் முதல் முறையாக யோகா செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகன்னஸ்பர்க் நகரில் இந்திய தூதரக வளாகத்தில் வாழும் கலை அமைப்பினர் மற்றும் யோகா பள்ளி பயிற்சியாளர்கள் இணைந்து யோகா செய்தனர். இதில் ஆயிரக்கணக்கான பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு யோகா செய்தனர். உலகம் முழுவதும் சுமார் 40 முதல் 50 கோடி பேர் யோகா பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் 70 இடங்களில் 85 பகுதிகளாக யோகா நிகழ்ச்சி நடந்துள்ளது. சீன பெருஞ்சுவர் பகுதியிலும், துஜியான்கியான் பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த 10 யோகா ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க 5 நாட்கள் யோகா பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

மூலக்கதை