மீண்டும் விலையேற்றம் காணும் நவிகோ அட்டை!!

PARIS TAMIL  PARIS TAMIL
மீண்டும் விலையேற்றம் காணும் நவிகோ அட்டை!!

நவிகோ பயண அட்டையின் விலை மீண்டும் விலையேற்றம் காண்கிறது.
கோடை விடுமுறை காலமான ஓகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து இந்த விலையேற்றம் ஏற்படுகிறது. முன்னதாக 70 யூரோக்களில் இருந்த ஒரு மாதத்துக்கான நவிகோ அட்டை, அதன் பின்னர் 73 யூரோக்களாக விலையேற்றம் கண்டது. தற்போது வரும் ஓகஸ்ட் 1 ஆம் திகதியுடன் 75.20 யூரோக்களுக்கு விலையேற்றம் காண்கிறது. 
 
இந்த தகவலை இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வர்  Valérie Pécresse தெரிவித்துள்ளார்.
 
 
மெற்றோ, தொடரூந்து, பேரூந்துக்களில் பயன்படுத்தப்படும் இந்த நவிகோ அட்டை, கடந்த 15 வருடங்களில் 29.15 யூரோக்களால் விலையேற்றம் கண்டுள்ளது. சராசரியாக வருடத்துக்கு 2 யூரோக்கள் படி இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக STIF நிறுவனம் தெரிவிக்கும் போது, 'இந்த விலையேற்றம் பெரியளவான பாதிப்பை மக்களிடத்தில் ஏற்படுத்தாது என நம்புகிறோம் எனவும், ஐரோப்பாவின் வேறு சில நகரங்களுடன் ஒப்பிடுகையில் பரிசில் போக்குவரத்து கண்டணங்கள் மிக குறைவு என்பது நீங்கள் அறிந்ததே!' எனவும் தெரிவித்துள்ளது.
 
மேலும், ஓகஸ்ட் மாதம் நெருங்கும் வேளையில் இது தொடர்பான அறிவித்தல்கள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை