பத்திரிக்கையாளர் சந்திப்பில் குளவியை மென்று தின்ற கோஸ்டா ரிகா அதிபர்!

PARIS TAMIL  PARIS TAMIL
பத்திரிக்கையாளர் சந்திப்பில் குளவியை மென்று தின்ற கோஸ்டா ரிகா அதிபர்!

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரியாமல் வாயில் சென்ற குளவியை மென்று தின்றார் கோஸ்டா ரிக்காவின் அதிபர் சோலிஸ் ரிவேரா.
 
மத்திய அமெரிக்க நாடானா கோஸ்டா ரிகாவின் அதிபர் சோலிஸ் ரிவேரா பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது, பறந்துவந்த ஒரு குளவி அவரது வாயில் தெரியாமல் நுழைந்து விட்டது. 
 
பேச்சுவாக்கில் அதை மென்று விட்டார். பத்திரிகையாளர்கள் அதைப் பார்த்துச் சிரித்ததும், மிச்சத்தையும் மென்று விழுங்கிய அதிபர், இது சுத்தமான புரதம் என்று நகைச்சுவையாகக் கூறிச் சமாளித்தார். 
 
இந்தக் காட்சியை ஊடகங்களின் கேமராக்கள் படம்பிடித்தன. செய்தியாளர்கள் சூழ்ந்திருக்க, இந்தக் காட்சி நேரலையிலும் ஒளிபரப்பானது. 

மூலக்கதை