நெதர்லாந்திடம் போராடி தோற்றது இந்தியா

தினகரன்  தினகரன்

லண்டன்: உலக ஹாக்கி லீக் அரை இறுதி தொடரின் லீக் ஆட்டத்தில், நெதர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா முதல் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அடுத்து கனடாவை 3-0 என்ற கோல் கணக்கிலும், பாகிஸ்தான் அணியை 7-1 என்ற கோல் கணக்கிலும் அபாரமாக வென்றது. பி பிரிவில் ஹாட்ரிக் வெற்றியுடன் முன்னிலை வகித்த இந்தியா, தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று நெதர்லாந்துடன் மோதியது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணிக்கு பிரிங்க்மேன் (2வது நிமிடம்), சேண்டர் பார்ட் (12’), மிர்கோ புரூய்ஜ்சர் (24’) ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து 3-0 என முன்னிலை கொடுத்தனர். இந்தியா சார்பில் ஆகாஷ்தீப் சிங் (28வது நிமிடம்) ஆறுதல் கோல் போட்டார். கால் இறுதி சுற்று நாளை தொடங்குகிறது.

மூலக்கதை