முக்கியம் - சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)

PARIS TAMIL  PARIS TAMIL
முக்கியம்  சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)

வெயிற்காலம் மிகவும் மோசமாகத் தொடரும் நிலையில், கடைப்பிடிக்க வேண்டிய பல ஆலோசனைகளைப் பிரான்சின் சுகாதார அவதானிப்பு மையம் வழங்கி உள்ளது.
 
 
1.ஒரு நாளைக்குக் குறைந்தது 1.5 லிட்டர் தண்ணீராவது குடிக்கவேண்டும். தாகம் எடுப்பதற்கு முன்னரே நீரை அடிக்கடி பருக வேண்டும்.

2. யன்னல்களின் வெளிச் சாளரங்களை (ஏழடநவள) பகல் நேரத்தில் மூடி வைத்திருத்தல் வேண்டும். இதனை மூடி, யன்னல்களைத் திறந்து வைத்திருக்கலாம்.

3. அடிக்கடி உடலை நனைத்தல் வேண்டும். நீர்த் தெளிப்பான்கள் (டீசரஅளையவநரச) மூலம் முகத்தை நனைத்துக் கொள்ளல் வேண்டும். முடியுமாயின் குளிர்ந்த நீரில் குளித்தல்வேண்டும்.

4. அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம். வெளியெ செல்லும்போதும், அல்லது, பூங்காவில் இளைப்பாறச் சென்றாலும் தொப்பி அணிந்து செல்லுதல் அவசியம்.

5. வெயில் நேரத்தில் உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுக்களை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

6. நனைக்கப்பட பெரும் சீலைத்துண்டை யன்னலின் உட்புறத்தில் போடுவதன் மூலம் அறையினை குளிர்மையாக வைத்திருக்க முடியும்.

7. கிழக்குப் பக்கத்தில், அல்லது, தென் கிழக்குப் பக்கத்திலுள்ள அறைகளில் தூங்குவது சிறந்தது. இதன் மூலம் காலை வெயிலை அனுபவிப்பதுடன் கடும் வெயிலைத் தவிர்க்க முடியும். இருக்கும் அறைக்குள் தாவரங்கள் இருந்தால் சிறப்பானது.

8. நீர் நிரம்பிய போத்தலை, முடிந்நதளவு ஆழ் குளிர்பதனப் பெட்டியில் வைத்து உயைற வைத்துவிட்டு, அதனை நீங்கள் இருக்கும் அறைக்குள் வைப்பதன் மூலம் வெப்பக்காற்றைக் குளிர வைக்க முடியும்.
 

 

மூலக்கதை