நியுசிலாந்தில் பிரெஞ்சு மாணவர்கள் பலி!!

PARIS TAMIL  PARIS TAMIL
நியுசிலாந்தில் பிரெஞ்சு மாணவர்கள் பலி!!

நியுசிலாந்தில் (Nouvelle-Zélande) நடந்த சாலை விபத்தொன்றில் மூன்று பிரெஞ்சு மாணவர்கள் பலியாக, மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். ஒக்லாந்தில் இருந்து 80 கிலோமீற்றர் தூரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
 
 
மிகவும் புகாராக இருந்த சமயத்தில், பிரெஞ்சு மாணவர்கள் ஐந்துபேரும் வந்த Toyota Corolla சிற்றுந்து, எதிரே வந்த BMW சிற்றுந்துடன் நேருக்கு நேர் மோதி உள்ளது. உடனடியாக Toyota Corolla தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் மூவர் கொல்லப்பட இரண்டுபேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
23 வயதுடைய இவர்கள் ஐந்து பேரும், Saint-Nazaire (Loire-Atlantique) இன் பொறியியல் கல்லூரி மாணவர்கள், ஒரு பயிற்சிக்காலத்திற்காக (Stage) பல மாதங்களாக நியுசிலாந்தில் தங்கியிருந்துள்ளனர்.
 
இவர்கள் மோதிய BMW இன் சாரதி இருக்கையில் இருந்தவரும் விபத்தின் அதிர்ச்சியில் சாவடைந்துள்ளார். காயமடைந்த இரண்டு மாணவர்களும் ஆபத்தான நிலையிலேயே உள்ளனர். 
 
இதனை வெளிவிகார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
 

மூலக்கதை