'தமிழ் தலைவாஸ்' தமிழக கபடி அணிக்கு பெயர் வைத்த சச்சின்!

தினகரன்  தினகரன்

டெல்லி: ஐபிஎல் போட்டிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ஹாக்கி, கபடி, கால்பந்து, பேட்மின்டன் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் லீக் போட்டிகள் தொடங்கப்பட்டன. அதன்படி கடந்த 2014ஆம் ஆண்டு புரோ கபடி லீக் தொடங்கப்பட்டது. டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், பாட்னா, புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய எட்டு அணிகள் இதில் பங்கேற்றன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, அடுத்த தொடரில் இருந்து, தமிழ்நாடு, குஜராத், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய நான்கு அணிகள் புரோ கபடியில் பங்கேற்க உள்ளன.  இதில் சென்னை அணியை மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் வாங்கியுள்ளார். இதனால் இப்போது இருந்தே விளையாட்டு பிரியர்களிடையே புரோ கபடி மீதான ஆர்வம்  அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழக அணியின் பெயரை சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார். அதன்படி தமிழக அணிக்கு \'தமிழ் தலைவாஸ்\' என பெயரிடப்பட்டுள்ளது ட்விட்டரில் சச்சின் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன், தமிழக அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் இந்திய அணி உலகக்கோப்பை வெல்லக் காரணமாக இருந்த அஜய் தாக்கூர், தமிழக வீரர் அருண் குமார் ஆகியோர்  தமிழக அணியில் இடம் பெற்றுள்ளனர். ஜூலை 28 ஆம் தேதி புரோ கபடி லீக் தொடங்கஉள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை